/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நிற்க நடவடிக்கை தர்மர் எம்.பி., நம்பிக்கை
/
சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நிற்க நடவடிக்கை தர்மர் எம்.பி., நம்பிக்கை
சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நிற்க நடவடிக்கை தர்மர் எம்.பி., நம்பிக்கை
சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நிற்க நடவடிக்கை தர்மர் எம்.பி., நம்பிக்கை
ADDED : டிச 19, 2025 05:14 AM
பரமக்குடி: சென்னை -- ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் கொடுத்த நிலையில் அதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக தர்மர் எம்.பி., நம்பிக்கை தெரிவித்தார்.
ஆன்மிக சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பிரதான இடத்தை வகிக்கிறது. இங்கு மின்சார ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து நவீன பாம்பன் துாக்கு பாலத்தில் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் சென்று வருகின்றன.
வந்தே பாரத் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட உள்ள நிலையில், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
தினமும் 3300 பயணிகள் ரயில்களை பயன்படுத்தும் நிலையில் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாயை கடந்துள்ளது.
எனவே சிவகங்கை, ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் வந்தே பாரத் நிற்கும் நிலையில் இடைப்பட்ட பரமக்குடி ஸ்டேஷனில் நிற்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தர்மர் எம்.பி., வலியுறுத்தினார்.
தர்மர் எம்.பி., கூறியதாவது: பரமக்குடியில் கைத்தறி நெசவு மற்றும் மிளகாய் வணிகம் உட்பட வணிகர்கள் அதிகளவில் உள்ளனர். பரமக்குடியில் இருந்து உயர் சிகிச்சை மற்றும் மேல் படிப்பிற்கு ஏராளமானவர்கள் தொலைதுாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து பரமக்குடி ஸ்டேஷனை பல்லாயிரம் பேர் பயன்படுத்தும் நிலையில், வந்தே பாரத் ரயில் நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.

