/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை கட்சியினர் வழங்கினால் நடவடிக்கை: கலெக்டர்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை கட்சியினர் வழங்கினால் நடவடிக்கை: கலெக்டர்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை கட்சியினர் வழங்கினால் நடவடிக்கை: கலெக்டர்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை கட்சியினர் வழங்கினால் நடவடிக்கை: கலெக்டர்
ADDED : நவ 19, 2025 07:27 AM
ராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் சீர்திருத்த படிவத்தை அரசியல் கட்சியினர் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1374 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தும் பணி நடக்கிறது. முதல் கட்டமாக வீடுகள் தோறும் சென்று படிவம் வழங்கப்பட்டுள்ளது. படிவத்தை பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவர் தான் வாக்களித்த பள்ளியை கண்டறிந்தால் போதும். அந்த பள்ளியில் உள்ள 5 ஓட்டுச்சாவடியில் தான் பெயர் இருக்கும்.
அதிலும் ஒருவரின் பெயருக்கு அருகில் தான் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும். கிராமங்களில் இந்த பிரச்னை பெரிய அளவில் இல்லை. நகரங்களில் தான் பழைய எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் பெயரை கண்டுபிடிக்க சிரமமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர் மட்டும் தான் கொடுக்க வேண்டும். ஆனால், படிவங்களை முகவர்கள் மூலம் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. படிவம் வழங்குவதில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

