/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
(சேர்க்கவும்) பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் தெருநாய்கள்: பயணிகள் பாதிப்பு

ADDED : டிச 28, 2025 05:24 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு தெருநாய்களும் உணவிற்காக ஏராளமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக பஸ் ஸ்டாண் வளாகத்திற்குள் பயணிகள் நடந்து செல்லும் போதும், பஸ்கள் புறப்படும் போதும் நாய்கள் குறுக்கே வருவதால் விபத்து அபாயம் உள்ளது.
வளாகத்திற்குள் நிரந்தரமாக தங்கி விட்டதால் நாய்கள் தங்ளை கடிக்க வாய்ப்பு உள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.