ADDED : நவ 19, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை கொத்துவா நள்ளி தெருவை சேர்ந்தவர் ஜெய்னுலாதீன் 25. இலங்கையில் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். சில நாட்களுக்கு சொந்த ஊருக்கு வந்த இவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இதில் இவரது மனைவி சுமைதா பானுவை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில் நேற்று (நவ.,18) இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையலறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
