தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : அக் 27, 2025 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செவ்வாய் தோறும் இரவு 7:45 மணிக்கு விரைவு ரயில் (எண் 16618) இயக்கப்படுகிறது.

மறு மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து புதன் தோறும் இரவு 7:55க்கு புறப்பட்டு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 6:30 மணிக்கு கோவை செல்கிறது. இந்த ரயில் 7 ஏ.சி., பெட்டிகள், 6 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நவ.,4 முதல் அடுத்த ஆண்டு ஏப்.,29- வரை கோவை--ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us