/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தையில் கூடுதலாக அமைக்கப்பட்ட மின்விளக்கு
/
வாரச்சந்தையில் கூடுதலாக அமைக்கப்பட்ட மின்விளக்கு
ADDED : செப் 05, 2025 11:23 PM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் வாரச்சந்தை வளாகத்தில் கூடுதல் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு முதுகுளத்துார், சாயல்குடி, கமுதி, அபிராமம், வீரசோழன் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
வாரச்சந்தையில் நடுவில் அமைக்கப் பட்டுள்ள கூடாரத்திற்கு மட்டும் மின்விளக்கு வசதி உள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடை களுக்கு போதுமான அளவு மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை நேரத்திற்கு மேல் இருளில் தவிக்கும் நிலை உள்ளது.
இதனால் கையில் மின் விளக்கை பிடித்து ஆபத்தான முறையில் வியாபாரம் செய்கின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.