ADDED : மார் 14, 2024 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, - திருவாடானை அருகே ஆதியாகுடி கிராமம் செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை அருகே திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டி.நாகனிக்கு செல்லும் ஆதியாகுடி தார் ரோட்டில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த வக்கீல் சுரேஷ் கூறியதாவது:
ஆதியாகுடியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். டி.நாகனி வரை செல்லும் இந்த ரோடு மிகவும் மோசமாக உள்ளது.ஆதியாகுடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.
வெளியூர்களிலிருந்து இப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே ரோட்டை சீரமைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

