/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப் பள்ளிகளில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
/
அரசுப் பள்ளிகளில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
அரசுப் பள்ளிகளில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
அரசுப் பள்ளிகளில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 02, 2024 04:56 AM

ஆர்.எஸ்.மங்கலம், :ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சம்ரத் நிஷா, துணை தலைவர் பதுரு ஜமான், ஆசிரியர் பயிற்றுநர் பிரகாஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
முக்கிய வீதிகளில் மாணவர்கள் ஊர்வலமாக சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து வலியுறுத்தினர். தெற்கு பள்ளிவாசல் பொருளாளர் ஜெயினுலாபுதீன், எஸ்.எம்.சி. உறுப்பினர் சேக் நைனா, ஆசிரியர்கள் குருநாதன், கலைச்செல்வி, ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் தமிழரசி துவக்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் உலகநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாத்திமா கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜு வரவேற்றார்.
ஊர்வலத்தில் மாணவர் சேர்க்கை குறித்து வலியுறுத்தப்பட்டு புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆசிரியர்கள் சந்திரா, அன்பில் அமலான், கவிதா, ஜான்சிராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருப்புல்லாணி வட்டார தொடக்க கல்வி அலுவலர் உஷாராணி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் அக்பர் ஜான் பீவி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ்கான், ஆசிரியர் பயிற்றுநர்கள் ரமேஷ், சந்திரசேகர், தலைமை ஆசிரியர் கொன்னமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மை குறித்த பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

