தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 08, 2024 12:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 12:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்சேர்க்கையை வலியுறுத்தி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் தேன்மொழி, தமிழரசி முன்னிலை வகித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கூட்டாம்புளி, சீனாங்குடி, முத்துப்பட்டினம், சாத்தனுார், ஓடைக்கரை, ஆனந்துார், சிறுநாகுடி, புத்துார், சேந்தமங்கலம், திருத்தேர்வளை, சிறுவண்டல், குலமாணிக்கம் உள்ளிட்ட தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வசதிகள் குறித்து பொதுமக்களிடம் ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். தலைமை ஆசிரியர்கள் செபஸ்டி சகாயம், அந்தோணியம்மாள், குழந்தை தெரஸ், செல்வி, பழனிவேல், இருதயசாமி, லுாயிஸ் ராஜமாணிக்கம், கோபாலகிருஷ்ணன், ராஜ சுதாகர், செபஸ்டின் தர்மராஜ், வேல்சாமி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us