/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் அமைப்பு: ஆர்வம் காட்டும் ஊரக வளர்ச்சித் துறையினர்
/
ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் அமைப்பு: ஆர்வம் காட்டும் ஊரக வளர்ச்சித் துறையினர்
ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் அமைப்பு: ஆர்வம் காட்டும் ஊரக வளர்ச்சித் துறையினர்
ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் அமைப்பு: ஆர்வம் காட்டும் ஊரக வளர்ச்சித் துறையினர்
ADDED : நவ 02, 2025 10:42 PM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்ட மதிப்பீடு விவரங்களை தற்போது சிமெண்ட் பதாகைகளுடன் பெயிண்ட் அடித்து அவற்றில் திட்ட மதிப்பீடுகளை எழுதி வருகின்றனர்.
ஊராட்சிகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட திட்ட மதிப்பீட்டு பணிகள் மற்றும் ஐந்தாண்டுகளில் செய்த சாதனை உள்ளிட்டவைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு அவற்றை சிமெண்ட் பலகைகளுடன் கூடிய பதாகையில் எழுதி வைத்து வருகின்றனர். இதற்கான இரண்டு துாண்கள் நிறுவி அவற்றில் கான்கிரீட் கலவையை கொட்டி பதாகைகளை இடம்பெறச் செய்துள்ளனர்.
முன்பு இரும்பு தகரத்தால் செய்யப்பட்ட போர்டுகள் மூலமாக நலத் திட்ட விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் அடிப்பகுதி சேதமடைந்து பெரும்பாலான ஊராட்சிகளில் அவை ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது போன்ற சிமெண்ட் மூலம் கான்கிரீட் நடைமுறையால் திட்டங்களை வெளிக் கொணர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகளின் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்டங்கள் பெருவாரியான ஊராட்சிகளில் பெயரளவிற்கே உள்ளன. அவற்றை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பெருவாரியான ஊராட்சிகளில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் அரசு நிதி வீணடிப்பு செய்யப்படுகிறது.
ஊராட்சிகளில் பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை முன்வைத்து அவற்றிற்கான திட்டங்களை தீட்டுவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் தெரிவித்தனர்.

