/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாப்பானேந்தல் பஸ் நிறுத்தம்: மாணவர்கள் பாதிப்பு
/
பாப்பானேந்தல் பஸ் நிறுத்தம்: மாணவர்கள் பாதிப்பு
ADDED : நவ 02, 2025 10:40 PM
ஆர்.எஸ்.மங்கலம்:  ராமநாதபுரத்தில் இருந்து பாப்பானேந்தல் வழித்தடத்தில் திருப்பாலைக்குடி செல்லும் அரசு டவுன் பஸ் பத்து நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, தேவிபட்டினம், பாப்பானேந்தல் வழியாக திருப்பாலைக்குடி சென்று வரும் வகையில் டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் இந்த பஸ் மூலம் அப்பகுதியில் இருந்து பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் 10 நாட்களாக இந்த வழித்தடத்தில் சென்று வந்த டவுன் பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாப்பானேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராம மாணவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து திருப்பாலைக்குடி டூயட் பாபு கூறுகையில், இந்த டவுன் பஸ் மூலம் பாப்பானேந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

