/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உற்பத்தி செலவு அதிகரிப்பதால் இறால்பண்ணைகள் குறைகிறது! வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் பாதிப்பு
/
உற்பத்தி செலவு அதிகரிப்பதால் இறால்பண்ணைகள் குறைகிறது! வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் பாதிப்பு
உற்பத்தி செலவு அதிகரிப்பதால் இறால்பண்ணைகள் குறைகிறது! வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் பாதிப்பு
உற்பத்தி செலவு அதிகரிப்பதால் இறால்பண்ணைகள் குறைகிறது! வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : நவ 02, 2025 10:35 PM
திருப்புல்லாணி: மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள சேதுக்கரை, கோரைக்குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இறால் பண்ணைகள் உள்ளன.  தீவனங்கள், வேலையாட்கள் கூலி, மின்சார கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளின் அதிகரிப்பால் இறால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால்  இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்புல்லாணி அருகே சேதுக்கரை மற்றும் கோரைக்குட்டம் பகுதியில் இறால் பண்ணைகள் 30க்கும் அதிகமாக உள்ளன.  கடந்த 1990 முதல் செயல்படும் இறால் பண்ணைகள் முறையாக தெப்பம் அமைத்து வளர்க்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.
இறால் பண்ணைகளின் உற்பத்தி செலவு மற்றும் தீவனங்கள், வேலையாட்கள் கூலி, மின்சார கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளின் அதிகரிப்பால் அவற்றை வளர்த்து முதல் தர இறாலாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் பெரும் சிக்கலுக்கு மத்தியில் வருமானம் ஈட்ட வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் கூறியதாவது:   மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள சேதுக்கரை, கோரைக்குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இறால் பண்ணைகள் உள்ளன. கடலும் ஆறும் சங்கமிக்கும் கழிமுகத்துவார பகுதியை ஒட்டியே இறால் பண்ணைகள் உள்ளன.
புதுச்சேரி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் இறால் குஞ்சுகள் வாங்கப்பட்டு முறையாக தீவனம் வழங்கி பராமரித்தால் நான்கு மாதங்களுக்கு பிறகு பயன் கிடைக்கும்.
ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட இறால்கள் தற்போது அமெரிக்க வரி விதிப்பால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் தரம் வாய்ந்த பெரிய இறால்கள் அதிக சுவை, சத்து மிக்கது. தற்போது முன்பு இருந்த நிலை மாறி குறைவான அளவில் இறால் பண்ணைகள் செயல்படுகின்றனை. உற்பத்தி செலவுகளாலும், பிற நோய் தாக்குதல், அதிகளவு பராமரிப்பாலும் இத்தொழிலில் இருந்த ஆர்வம் முன்பு போல் இல்லை என்றனர்.

