நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி திருவாடானை சட்டசபை தொகுதி ஆலோசனை கூட்டம் தேவிபட்டினத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ பாலுசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர் கொள்வது, ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சுற்றுப் பயணம் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஜன.,ல் மதுரையில் நடக்க உள்ள புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டிற்கு தயாராவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், ஜெயசந்திரன், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

