/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2025 10:34 PM
தேவிபட்டினம்:  தேவிபட்டினம் 3 வது வார்டு பகுதியில் அப்பகுதி குழந்தைகள் பயனடையும் வகையில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
மேலும் தேவிபட்டினம் 10 வது வார்டு தெற்கு தோப்பு, அரபு நத்தம் காடு தர்ஹா சாலை பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிராம சபை கூட்டத்தில் எஸ.டி.பி.ஐ.,,கட்சி மீனவர் அணி மாவட்ட இணை செயலாளர் மைதீன், சட்டசபை தொகுதி இணை செயலாளர் அலாவுதீன், நகரத் தலைவர் ஹாஜி அலி உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.