/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் குலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை
/
நெற்பயிரில் குலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை
ADDED : டிச 18, 2024 07:40 AM
ஆர்.எஸ்.மங்கலம், : நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 20,573 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சில பகுதிகளில் மகசூல் நிலையை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் இலைகள், தண்டு, கணுப்பகுதி கதிர் பகுதிகளில் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு நெற்பயிர் மகசூலை பாதிக்கும்.
இந்த குலை நோய் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர்களின் இலைகளின் மேல்பகுதி வெண்மை நிறத்தில் மாறுவதுடன் அதன் மேல் பகுதியில் சாம்பல் நிறத்தில் கண் வடிவ புள்ளிகள் காணப்படும். தீவிர தாக்குதல் ஏற்பட்டதால் பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும்.
இந்த வகை அறிகுறிகள் தென்படும் நெல் வயல்களில் இயற்கை முறையில் இந்நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா 0.5 சதவீத கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் வயலில் தெளிக்க வேண்டும்.
நோய் தாக்குதல் தீவிரமாக இருந்தால் ஏக்கருக்கு டிரை சைக்ளோ சோல் 75 டபில்யூ பி, 200 கிராம் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு சுப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.