/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்ற அறிவுரை
/
மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்ற அறிவுரை
மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்ற அறிவுரை
மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்ற அறிவுரை
ADDED : நவ 07, 2024 01:43 AM
திருவாடானை: மழைக் காலம் என்பதால் வீடுகள் முன் மின் கம்பிகளுக்கு இடையில் செல்லும் மரக்கிளைகளை அகற்ற மின்வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழைக்காலங்களில் சூறவாளிக் காற்று வீசும் போது மரக்கிளைகள் முறிந்து உயர் மின் அழுத்த மின்கம்பிகள் மீது விழுகின்றன. இதனால் மின் விபத்துகள், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
மின் விபத்துகளை தடுக்க மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதும் பெரும்பாலான வீடுகள் முன்புள்ள மரங்களால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இது குறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்சித்திவிநாயகமூர்த்தி கூறியதாவது:
சின்னக்கீரமங்கலம், தொண்டி, நகரிகாத்தான், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், ஆனந்துார் ஆகிய இடங்களில் துணை மின்நிலையங்கள் உள்ளன. மாதாந்திர பராமரிப்பின் போது விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.
பெரும்பாலான வீடுகளுக்கு முன்புள்ள மரங்கள் இடையூறாக உள்ளது. மழைக்காலம் என்பதால் வீட்டு உரிமையாளர்கள்மின் கம்பிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் அகற்றிக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள பனை மரங்களில் இருந்து பலத்த காற்று வீசும் போது விழும் ஓலைகள் மின் கம்பிகளில் விழுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.