/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலை சுருட்டுப் புழு தப்பிக்க அறிவுரை
/
இலை சுருட்டுப் புழு தப்பிக்க அறிவுரை
ADDED : டிச 03, 2025 06:57 AM
திருவாடானை: பயிர்களில் இலைசுருட்டுப் புழு நோயிலிருந்து தப்பிக்க வேளாண் அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
திருவாடானை வேளாண் உதவி இயக்குநர் தினேஷ்வரி கூறியதாவது: வயல்களில் நெற்பயிர் இலைகளில் ஓரங்களை மடக்கிக் கொண்டு புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் பயிர்கள் வெண்ணிற சருகு போல் தோற்றமளிக்கும். இதனால் பயிர் வளர்ச்சி குறையும்.இந்த அறிகுறிகள் பயிர்களில் இருந்தால் விவசாயிகள் முதலாவதாக வயல்களில் உள்ள களைகளை அழிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை குறைத்து பரிந்துரைக்கப்பட்ட யூரியாவை வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து மேல் உரமாக இட வேண்டும்.
அந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்க விளக்குப்பொறி அமைத்து உபயோகிக்க வேண்டும். இதை கட்டுப்படுத்த குளோரண் டிரானிலிபுரோல், கார்டாப் ஹைட்ரோ குளோரைடு, ப்ளூ பெண்டியாமைடு உள்ளிட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஒட்டும் திரவம் சேர்த்து 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளித்து இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றார்.

