
கமுதி; கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் செங்கோட்டைபட்டி கிராமத்தில் வேளாண் கண்காட்சி நடந்தது.
கல்லூரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சண்முகம் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
அப்போது வேளாண் தொழில் நுட்பங்களான இயற்கை வேளாண்மை, காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, பட்டு புழு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், பூச்சி மற்றும் பயிர் நோய் மேலாண்மை, உணவுப் பொருட்களில் மதிப்பு கூட்டல், ஒருங்கிணைந்த வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கினர்.
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் துணை முதல்வர் திருவேணி, உதவி பேராசிரியர்கள் ரஞ்சிதம், தமிழ்ச்செல்வன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.