ADDED : ஜூலை 13, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டடம் விரிசல் ஏற்பட்டும், தரைத்தளமும் பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளதால், அலுவலக ஊழியர்களுக்கு விபத்து அச்சத்தில் உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தில், பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் விவசாய இடுபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைகளிலும், பொதுமக்கள் செல்லும் முகப்பு படி பகுதிகளிலும், தரைத்தளத்தின் நடைபாதைகள் சேதம் அடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதால் அலுவலக ஊழியர்கள், அங்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டடத்தில் உறுதித் தன்மை ஆய்வு செய்து, சேதங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.