/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
/
நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : டிச 26, 2024 04:35 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்குடி, சோழந்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மகசூல் நிலையில் உள்ள நெற்பயிர்களில் குலை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நெல் வயல்களை வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் அமர்லால், வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், மற்றும் வேளாண் அறிவியல் விஞ்ஞானி ராம்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள (பி.பி.டி. 5204) டீலக்ஸ் பொன்னி ரகத்தில் அதிகளவில் இந்நோய் தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டது. நோய் தாக்குதலுக்குள்ளான வயல்களில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை கரைசல் அல்லது டிரை சைக்கிளோல் 75 பி, 200 கிராம் அல்லது கார்டிபன்டிசின் 50பி, 200 கிராம் ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் வருங்காலங்களில் டீலக்ஸ் பொன்னி ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்வதை குறைத்துக் கொள்ள விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கினர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு சுப்ரியா கலந்து கொண்டார்.

