UPDATED : ஆக 19, 2026 05:06 PM
ADDED : ஆக 19, 2026 04:53 PM
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம், சித்துார்வாடி கிராமத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ், கிராம அளவிலான வேளாண் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன் முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றியும், உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் இடுவதன் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், கோடை உழவு செய்வதன் நன்மைகள் குறித்தும், ஜிப்சம் இடுவதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில், பரமக்குடி உழவர் பயிற்சி நிலையம் வேளாண் அலுவலர் சீதாலட்சுமி, ஆர்.எஸ்.மங்கலம் உதவி மேலாண்மை அலுவலர் ரிஷி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகானந்தம், ஆனந்த் பங்கேற்றனர்.
