UPDATED : ஆக 19, 2026 05:06 PM
ADDED : ஆக 19, 2026 04:53 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், புதுமடம் அருகே உள்ள மோட்டையன்வலசை கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணி குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜூன் குமார் ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் தொடங்கும் முன்பு டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கடந்த வாரம் மழை பெய்ததால் தேங்கிய தண்ணீரில் கொசு முட்டை உற்பத்தியாகியுள்ளன. மலேரியா பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடிநீரில் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்கின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், தினேஷ் உடனிருந்தனர்.
