/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரி மாணவர்களுக்கு விவசாய பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு விவசாய பயிற்சி
ADDED : டிச 27, 2024 04:45 AM
கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரியில் தேசிய உழவர் திருநாளை முன்னிட்டு மாணவர்களின் பயிற்சி நடந்தது. கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் விவசாயி ராமர் பல ஆண்டுகளாக மிளகாய்,வாழை, தக்காளி உள்ளிட்ட இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இவரது நிலத்தில் நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது இயற்கை விவசாயி ராமர் மாணவர்களுக்கு மண்வளம் குறித்தும், இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளம் காப்பது, இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்து லாபம் அடைவது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
உதவி பேராசிரியர்கள் செல்வி சரண்யா, தமிழ்ச்செல்வன் இருந்தனர். கல்லுாரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.