/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைனில் விவசாய நிலங்களில் சர்வே பணியில் ஈடுபடும் வேளாண் துறையினர்
/
ஆன்லைனில் விவசாய நிலங்களில் சர்வே பணியில் ஈடுபடும் வேளாண் துறையினர்
ஆன்லைனில் விவசாய நிலங்களில் சர்வே பணியில் ஈடுபடும் வேளாண் துறையினர்
ஆன்லைனில் விவசாய நிலங்களில் சர்வே பணியில் ஈடுபடும் வேளாண் துறையினர்
ADDED : அக் 19, 2025 02:52 AM
கடலாடி: கடலாடி வட்டார வேளாண் துறையில் 60 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கொக்கரசன் கோட்டை, கொண்டு நல்லான் பட்டி, டி.எம்.கோட்டை, டி. கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சோளம், மிளகாய், மல்லி உள்ளிட்ட சிறு குறு தானியங்கள் சாகுபடி செய்கின்றனர்.
பெருவாரியான கிராமப் பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் விவசாய நிலங்களில் வேளாண் துறை சார்பில் மூன்று மாதங்களாக சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று சேட்டிலைட் மற்றும் ஜிபிஎஸ் மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அந்த நிலத்தின் சர்வே நம்பர் மற்றும் செயலி மூலம் சப் டிவிசனுக்கு சென்று நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் துறையினர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களிலும் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகளின் விளைநிலங்களில் ஜிபிஎஸ் மூலம் ஆன்லைன் அப்டேட் செய்யப்படுகிறது.
முன்பு சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., மூலம் அடங்கல் வழங்கப்பட்டது. வருகிற 2026க்கு பிறகு ஆன்லைன் மூலமாக அடங்கல் உள்ளிட்டவைகள் பெரும் வசதி செய்யப்படும்.
ஒரு சில விவசாயிகள் தரிசு நிலங்களை சீர் செய்யாமல், இன்சூரன்ஸ் பெறுவதை தவிர்க்க இது மாதிரியான சேட்டிலைட் புகைப்படங்கள் நேரடியாக உள்ளதை காண்பிக்கிறது.
இதன் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த தரிசு நிலங்கள் தனியாக காண்பிக்கும் முறையும் உள்ளது.
இதன் மூலம் முறையான விவசாயிகளுக்கு நிலங்களின் சேதமதிப்பீடு விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கும் பயனாக அமையும் என்றனர்.
பெருவாரியான யூனியன்களில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.