/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சைக்கிளில் மாநிலங்களை சுற்றி வரும் முதியவர் 6 ஆண்டுகளாக உலக அமைதி வேண்டி பயணம்

ADDED : அக் 19, 2025 02:54 AM

சாயல்குடி: உலக அமைதி வேண்டியும், விஸ்வசாந்தி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கர்நாடகத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றி விட்டு நிறைவாக ராமேஸ்வரம் சென்று விட்டு சாயல்குடி நோக்கி சைக்கிள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் முதியவர் நாகராஜ் கவுடா 65. அவர் கூறியதாவது:
எனக்கு திருமணம் ஆகவில்லை. பாரதம் முழுவதும் உலக அமைதி மற்றும் தேசபக்தியை வலியுறுத்தி சைக்கிள் மூலமாக 2019ல் கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் இருந்து புறப்பட்டு மும்பை, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக சென்று விட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வந்துள்ளேன்.
புதுச்சேரி வந்து ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கன்னியாகுமரி செல்வதற்காக வந்துள்ளேன். சைக்கிளில் பெட்ஷீட், பம்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வைத்துள்ளேன். கோயில், குருத்துவாரா, மடாலயங்கள் உள்ளிட்டவற்றில் இரவு நேரங்களில் தங்கி கொண்டு மீண்டும் பயணம் தொடர்கிறேன்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊருக்கு சைக்கிளில் செல்ல உள்ளேன். எனக்கு 5 மொழி பாஷைகள் தெரியும். இடைவிடாத கடவுள் பக்தியும், தேச பக்தியும் மனிதனுக்கு தேவை என்றார்.