/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் விவசாயிகள்
/
நெல் வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் விவசாயிகள்
நெல் வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் விவசாயிகள்
நெல் வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் விவசாயிகள்
ADDED : அக் 19, 2025 02:57 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் வயல்களில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பருவமழையை எதிர்பார்த்து கடந்த மாதம் விவசாயிகள் நெல் விதைப்பு செய்தனர். விதைப்பு செய்யப்பட்ட பின் நிலவிய கடும் வறட்சியால் நெற்பயிர்கள் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சிலுகவயல், செட்டியமடை, சவேரியார் பட்டினம், செங்கமடை, சனவேலி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் தற்போது முளைக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில் கனமழை காரணமாக பெரும்பாலான நெல் வயில்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முளைத்து வரும் நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நெற்பயிர்களை காப்பாற்றும் விதமாக வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை விவசாயிகள் வெளி யேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.