ADDED : ஜூலை 12, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் வேளாண் துறை மூலம் உழவரை தேடி வேளாண்மைத்துறை திட்ட முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் கேசவராமன் தலைமை வகித்தார். துணை இயக்குனர் ராஜேந்திரன் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறினார். மண்வளம் காப்பதற்கு தக்கை பூண்டு சாகுபடி பற்றியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தேவையான இயற்கை உரங்கள் குறித்தும், செயற்கை உரங்கள் பயன்பாடு, தொழு உரம் தயாரிப்பது குறித்தும் விளக்கினார். விவசாயிகளுக்கு இடுபொருட்கள், உயிரி உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. அட்மா திட்ட உதவி மேலாளர் இந்து நன்றி கூறினார்.