/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட் கோவில்பட்டியில் அ,தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
/
ஆட் கோவில்பட்டியில் அ,தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
ஆட் கோவில்பட்டியில் அ,தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
ஆட் கோவில்பட்டியில் அ,தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
ADDED : ஆக 02, 2025 02:07 AM
விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் பழனிசாமி பேசியதாவது:
ஏழைகளுக்கு வைத்தியம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தியது தி.மு.க.,அரசு. 100 நாள் வேலை திட்டம் 150 நாள் திட்டமாக மாற்றப்படும், மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும், சிலிண்டர் மானியம், டீசல் விலை குறைப்பு உள்பட தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
மருத்துவமனைகளில்டாக்டர், செவிலியர், உதவியாளர் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் நன்றாக டிரஸ் போட்டுக் கொண்டு ஒரு போட்டோஷூட் எடுத்து ஒரு தலைப்பு வைத்து விட்டால் போதும். அதோடு அந்த திட்டம் முடிந்து விடும். எனக்கு விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. நான் போட்டோ ஷூட் நடத்த வரவில்லை. தி.மு.க., ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.