/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து டிச., 30ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து டிச., 30ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் தினமலர் டீக்கடை பெஞ்ச் செய்தி எதிரொலி

ADDED : டிச 28, 2025 05:26 AM
ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் டீக்கடை பெஞ்ச் செய்தி எதிரொலியாக, 'ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து டிச., 30 அ.தி.மு.க., சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும்' என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:
தி.மு.க.,வைச் சேர்ந்த ராமநாதபுரம் நகராட்சி தலைவர், மக்கள் நலப் பணிகளில் ஈடுபடாமல் முற்றிலும் ஆதாய நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பெரும்பாலான வார்டுகளில் கழிவுநீர் சாலைகளில் ஒடிக்கொண்டிருப்பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகள் முழுதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருக்கும் கடைகளை ஒதுக்குவதில், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட தி.மு.க.,வினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் வருகின்றன.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், ஊழியர்கள் இல்லை. மருத்துவக் கல்லுாரி வரை பாதாள சாக்கடைத் திட்டம் இல்லை.
இதனால் இங்கும் கழிவுநீர் கலப்பு ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள அம்மா உணவகமும் மூடப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், ராமநாதபுரம் நகராட்சியையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் டிச., 30 காலை 10:30 மணிக்கு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இதி ல் அ.தி.மு.க., அமைப்புச் செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* தின மலர் டீக்கடை பெஞ்ச் எதிரொலி:
ராமநாதபுரம் நகராட்சியின் அவல நிலை குறித்தும், பல மாதங்களாக குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பதை சரி செய்யாதது.
பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வியால் பல ஆண்டுகளாக நகர் முழுவதும் பாதாள சாக்கடை ரோடுகளில் ஓடுவது குறித்தும், இதற்காக வேலை செய்வதாக நகராட்சியில் பல கோடி சுருட்டுவது, ரூ.20 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ்ஸ்டாண்டில் பயணிகள் இருக்கை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தினமலர் நாளிதழ் டீக்கடை பெஞ்சில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் மவுனம் காப்பது குறித்தும், இதனால் இந்த தொகுதி எம்.எல்.ஏ., வான தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா மீண்டும் எளிதில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது குறித்து எழுதப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக அடுத்த நாளே அ.தி.மு.க., பொதுச்செயலாளர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.