/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி
ADDED : ஆக 20, 2025 11:32 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு சார்பில், சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ஆனந்த் தலைமை வகித்தார். எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேலாளர் முருகேசன் முன்னிலையில் போட்டியின் நடுவர்கள் கல்லுாரி இணை பேராசிரியர் வித்யா, செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வேல்பாண்டி மற்றும் மாணவர்கள் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
ரத்தக்கொடை, காசநோய், எச்.ஐ.வி., பால்வினை நோய், பொதுசுகாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் வினாடி-வினா போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5000, 2ம் இடம் ரூ.4000, 3ம் இடம் ரூ.3000 ஆறுதல் பரிசு ரூ.2000 விரைவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.