/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி இல்லை : கண்டுகொள்ளாத ஊராட்சி
/
ஏர்வாடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி இல்லை : கண்டுகொள்ளாத ஊராட்சி
ஏர்வாடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி இல்லை : கண்டுகொள்ளாத ஊராட்சி
ஏர்வாடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி இல்லை : கண்டுகொள்ளாத ஊராட்சி
ADDED : மார் 24, 2025 05:58 AM
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்வாடி தர்கா பின்புறமுள்ள மீன் மார்க்கெட்டில் 30 கடைகள் உள்ள நிலையில் குடிநீர், கழிப்பறை உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
இங்கு இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய கழிப்பறை வசதிகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகள் ஏதுமின்றி அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது :
ஏர்வாடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அவற்றை உடனுக்குடன் அள்ளுவதற்கான வழி இல்லாத நிலையில் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.
சின்ன ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார கடற்கரை கிராமங்களில் இருந்து வரக்கூடிய மீன்களை இங்குள்ள மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்கின்றனர். ஏர்வாடி ஊராட்சி சார்பில் ஒரு கடைக்கு ரூ.40 வீதம் வசூல் செய்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. குப்பை அகற்றப்படாமல் தேங்குகிறது.
எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலாடி யூனியன் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க மீன் மார்க்கெட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.