/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி சந்தனக்கூடு விழா: மே 22ல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
/
ஏர்வாடி சந்தனக்கூடு விழா: மே 22ல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி சந்தனக்கூடு விழா: மே 22ல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி சந்தனக்கூடு விழா: மே 22ல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ADDED : ஏப் 30, 2025 06:23 AM
ராமநாதபுரம்; ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மே 22 ல் ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை தாலுகா ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல்அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மே 21ல் தொடங்கி 22 மதியம் வரைநடக்கிறது.
இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22 (வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறைஅளிக்கப்படுகிறது.
அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜூன் 14ல் (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
அதே சமயம் மே22ல் ராமநாதபுரம் மாட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்கள் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.