/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் எல்லா ரயில்களும் மின்சார இன்ஜினில் இயக்கம்
/
ராமேஸ்வரத்தில் எல்லா ரயில்களும் மின்சார இன்ஜினில் இயக்கம்
ராமேஸ்வரத்தில் எல்லா ரயில்களும் மின்சார இன்ஜினில் இயக்கம்
ராமேஸ்வரத்தில் எல்லா ரயில்களும் மின்சார இன்ஜினில் இயக்கம்
ADDED : செப் 23, 2025 06:22 AM
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நேற்று முன்தினம் முதல் மின்சார இன்ஜினில் இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை மின்சார ரயில் இன்ஜின் இயக்குவதற்கு மின் வழித்தடம் அமைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு மின்சார இன்ஜினில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் தினமும் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு அதிகாலை 5:40, மதியம் 2:40, மாலை 6:00, திருச்சிக்கு மதியம் 2:55, தாம்பரம் மாலை 4:00 மணி, சென்னைக்கு மாலை 5:25, இரவு 8:35 மணி மற்றும் வாரம் 3 நாட்கள் திருப்பதி, கன்னியாகுமரி, வாரம் ஒரு முறை கோவை மற்றும் குஜராத் ஓகா, ஒடிசா புவனேஸ்வர், உ.பி., அயோத்தியா உள்ளிட்ட சில வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் மின்சார இன்ஜினில் இயக்கப்படுகிறது.
ஒரு சில மாதங்களில் மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், ராமநாதபுரத்தில் இருந்து மைசூரு, ஹூப்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.