/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எட்டு கண்மாய்களுக்கு ரூ.8.92 கோடி ஒதுக்கீடு
/
எட்டு கண்மாய்களுக்கு ரூ.8.92 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 08, 2024 12:41 PM
திருவாடானை: ஆர்.ஆர்.ஆர்., திட்டத்தில்(பழுது நீக்கி புதுப்பித்து நீர்தேக்கும் திட்டம்) எட்டு கண்மாய்களை மறு சீரமைக்க ரூ.8.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் அரசன் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் எட்டு கண்மாய்களுக்கு ஆர்.ஆர்.ஆர்., திட்டத்தில் ரூ. 8.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாஞ்சூர் ரூ.96 லட்சம், நம்புதாளை ரூ.1.31 கோடி, குஞ்சங்குளம் ரூ.1.26 கோடி, கோடனுார் ரூ.97 லட்சம், இலுப்பக்குடி ரூ.1.30 கோடி, அடுத்தகுடி ரூ.1.22 கோடி, கட்டவிளாகம் ரூ.92 லட்சம், கல்விழியேந்தல் ரூ.98 லட்சம் என கண்மாய்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகை மூலம் அந்தந்த கண்மாய்களில் மடை, கலுங்கு, கண்மாய்க்கரை உயர்த்துதல், சீமைக்கருவேல மரங்கள்அகற்றுதல் உட்பட கண்மாய்களின் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றார்.

