/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பரிசு வழங்கி கவுரவிப்பு
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பரிசு வழங்கி கவுரவிப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பரிசு வழங்கி கவுரவிப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பரிசு வழங்கி கவுரவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:36 PM
பெரியபட்டினம்:பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1982 முதல் 1992 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர் நல சங்க அமைப்பைச் சேர்ந்த செய்யது இப்ராம்ஷா, செய்யது யூசுப், சாகுல் ஹமீது, அகமது ஜலாலுதீன், அப்துல் நைனா, சைமுராஜா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
2024 --25ல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில வழியில் முதல் மூன்று இடங்களை பெற்ற ஆறு மாணவர்களுக்கும், பிளஸ் 2 அரசு பொது தேர்வில் பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 9 மாணவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த பாட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் கோபால்சாமி வரவேற்றார். ஜெயபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். நல்லாசிரியர் விருது பெற்ற முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.