/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரத்தானில் செய்யது அம்மாள் கல்லுாரி மாணவி முதலிடம்
/
மாரத்தானில் செய்யது அம்மாள் கல்லுாரி மாணவி முதலிடம்
மாரத்தானில் செய்யது அம்மாள் கல்லுாரி மாணவி முதலிடம்
மாரத்தானில் செய்யது அம்மாள் கல்லுாரி மாணவி முதலிடம்
ADDED : அக் 27, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனையில் அப்துல்கலாம் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில்,பெண்களுக்கான 5 கி.மீ., மாரத்தான் போட்டியில் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியின் கணினி தொழில்நுட்பத்துறை முதலாமாண்டு மாணவி மவுனிகா முதலிடம் பெற்றார். அவருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சான்றிதழை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
சாதித்துள்ள மாணவியை கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.