/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாடு தண்ணீர் குடிக்க பழங்கால தொட்டி
/
மாடு தண்ணீர் குடிக்க பழங்கால தொட்டி
ADDED : ஏப் 03, 2025 05:17 AM

திருவாடானை: திருவாடானை பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாட்டு தொட்டிகள் காட்சி பொருளாகியுள்ளது. பண்டைய காலத்தில் மாடுகள் வளர்ப்பதில் மக்கள் ஆர்வமாக இருந்ததால் வீட்டுக்கு வீடு உழவு மாடுகள் வளர்க்கப்பட்டது.
வயல்களில் உழவுக்கும், வயல்களிலிருந்து நெல் மூடைகளை வண்டிகளில் ஏற்றி வர காளை மாடுகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த மாடுகளுக்கு தேவையான குடிநீரை வழங்க பழங்கால முறையில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் தொட்டிகள் கற்களால் செய்யப்பட்டிருக்கும்.
அவை திறந்த வெளியில் அமைக்கப்பட்டு மாடுகளுக்கு தேவையான போது தண்ணீர் கிடைக்க வசதியாக இருக்கும்.
இந்த தண்ணீர் தொட்டிகள் தீவனத் தொட்டிக்கு அருகில் இருக்கும். மாடுகள் தீவனம் தின்ற பின் தண்ணீர் குடிக்கலாம். மாடுகளுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்த தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது மாடுகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர். சிலர் சிமென்டால் ஆன தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர்.
தற்போது இயந்திர பயன்பாடு அதிகரித்ததால் மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மாடுகள் வளர்ப்பு குறைந்து மாட்டு வண்டிகள் மாயமானது.
கால்நடை வளர்ப்பை அதிகமாக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் விலையில்லாத ஆடு, மாடுகள் வளர்க்கும் திட்டம் ஒன்றாகும்.
இருந்த போதும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் தாக்குவதால் கால்நடை வளர்ப்பு நலிந்து வருகிறது.

