/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
/
இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 04, 2025 05:26 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுமையாக கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலம் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பல்வேறு குளறுபடியை உருவாக்கும் டி.எச்.ஆர்., திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத்தலைவர் உமாராணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் கே.மல்லிகா, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி உட்பட நிர்வாகிகள் பேசினர்.