/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
ராமநாதபுரத்தில் அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 09:11 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் உமாராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயலாளர் மல்லிகா முன்னிலை வகித்தார். உமாராணி கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையும், ரூ.9000 குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் பாலயோகினி, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

