/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆற்றில் ஒதுங்கி குவியும் குப்பை: நீர் நிலைக்கு பாதுகாப்பில்லை

ADDED : நவ 05, 2025 09:11 PM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் அதிகளவு பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை ஒதுங்குதால் சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது.
பரமக்குடி நகராட்சியில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினந்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பை என பல டன் அள்ளப்படுகிறது. இவை நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் பணியாளர்களால் கொண்டு செல்லப்படுகிறது. இவற்றை ஆங்காங்கே அமைக்கப்பட்ட குப்பை பிரிப்பகங்களில் சேர்க்க வேண்டும்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அனைத்து குப்பையும் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை ஆறு கரையோரங்கள் மற்றும் பாலம் பகுதிகளில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீர் வரும் காலங்களில் குப்பை தண்ணீருடன் கலந்து ஆங்காங்கே சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.
மேலும் நீர் நிலைகளில் தங்குவதால் ஊற்று நீருக்கும் சிக்கல் உண்டாகிறது.
ஆகவே வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள குப்பையை முழுமையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆற்றுப்பகுதியில் குப்பை கொட்டுவோர் மீது நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.