ADDED : நவ 05, 2025 09:10 PM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே காத்தாகுளத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் அமைக்கப்பட்டது. தற்போது மின்கம்பம் ஆங்காங்கே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மின்கம்பம் விரிசலடைந்திருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக காத்தாகுளம் கிராமத்தில் புதிய மின்கம்பம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பத்தை மின்வாரிய பணியாளர்கள் மாற்றி அமைத்தனர்.செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

