UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடி கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடந்தது. உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கள் விக்னேஷ், லட்சுமிபிரியன் முன்னிலை வகித்தனர்.
கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல், குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் 45 பேரின் 764 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வாளர் வீரகேசரி,உதவியாளர்கள் நதியா,விஜயராணி பங்கேற்றனர்.
