/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில், போகலுாரில் கால்நடை சுகாதார முகாம்
/
நயினார்கோவில், போகலுாரில் கால்நடை சுகாதார முகாம்
ADDED : ஜூன் 26, 2025 10:59 PM
பரமக்குடி; பரமக்குடி அருகே நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நயினார்கோவில் ஒன்றியம் சதுர்வேத மங்கலத்தில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பரமக்குடி உதவி இயக்குனர் டாக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி மருத்துவர்கள் சாரதா, சீதா லட்சுமி, கால்நடை ஆய்வாளர்கள் பாஸ்கரன், சாத்தையா, பராமரிப்பு உதவியாளர் அருணகிரி பங்கேற்றனர்.
இங்கு 55 பயனாளிகளின் கோழி, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் பசுமாடுகள், நாய் என 1312 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
*போகலுார் ஒன்றியம் செவ்வூர் கிராமத்தில் உதவி மருத்துவர்கள் ரஜினி, நந்தினி, ஆய்வாளர்கள் வனிதா, சுப்பிரமணி, உதவியாளர் சுனைதா பானு பங்கேற்றனர். இங்கு 51 பேரின் 1294 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்படி செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், மாடுகளில் கால் காணை, வாய் காணை மற்றும் கன்று வீச்சு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிடாரி கன்று உரிமையாளர் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்புக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.