/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஆஞ்சநேயர் வீதியுலா
/
பரமக்குடியில் ஆஞ்சநேயர் வீதியுலா
ADDED : டிச 29, 2024 04:15 AM

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஆஞ்சநேயர் அமர்ந்த திருக்கோலத்தில் வீதி உலா வந்தார்.
மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி மற்றும் அனுமன் ஜெயந்தி விழா நகராட்சி எதிரில் உள்ள கோதண்டராமசாமி கோயிலில் நடக்கிறது. இங்கு ஆஞ்சநேயர் புளிய மரத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளது. இதன்படி புளிய மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று காலை அபிஷேகம் நிறைவடைந்து, மாலை புஷ்ப கேடயத்தில் ஆஞ்சநேயர் வீதி உலா வந்தார்.
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் வெண்ணை காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அனைத்துக் கோயில்களிலும் நாளை(டிச.,30) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.