UPDATED : அக் 21, 2026 04:50 PM
ADDED : அக் 21, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வல்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அக்.,25 ல் அன்னாபிேஷகம் நடைபெற உள்ளது. இந்த வழிபாட்டின் போது மூலவர் உடலில் பூசப்படும் அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயம் செழிக்கவும் இந்த அன்னாபிேஷகம் நடைபெறுவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
