UPDATED : அக் 21, 2026 04:50 PM
ADDED : அக் 21, 2026 04:44 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முருகபூபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி கல்யாண சுந்தரம் துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஷ் பேசியதாவது:
த.வெ.க., அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், இளங்கோவன், வெங்கடசுப்பிரமணியன், நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
