நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள பத்ரகாளியம்மன், நாராயணசுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
மூலவர்கள் பத்ரகாளியம்மன், நாராயண சுவாமி, லிங்கேஸ்வரர், குபேரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

