ADDED : டிச 13, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி 18 வது வார்டு முத்தாலம்மன் கோயில் அருகில் பழைய நாடக மேடையை அகற்றி புதிய நவீன நாடக மேடை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
2025--26 ம் ஆண்டு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். பரமக்குடி நகராட்சி கமிஷனர் தாமரை, நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, இன்ஜினியர் கோமதி சங்கர், நகராட்சி கவுன்சிலர்கள் சதீஷ்குமார், கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

