ADDED : ஜூன் 23, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஜூன் 24-: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் காமாட்சி அம்மன் கோயில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக விநாயகர் ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், மூலவருக்கு ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
