ADDED : ஜூன் 23, 2026 10:04 PM
திருவாடானை: திருவாடானை நீதிமன்ற நுழைவு வாயில் மற்றும் நடைபாதையில் தெருவிளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நீதிமன்றம் உள்ளது. இங்கு நாள்தோறும் வழக்குகள் சம்பந்தமாகவும், பிற பணிகளுக்காகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நீதிமன்ற நுழைவு வாயில் மற்றும் உள் பகுதி நடைபாதையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இரவு நேரப் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணிக்காக செல்லும் போலீசார் அவதிப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளை காவலில் வைப்பதற்காகவோ, அல்லது பிற சிறைகளிலிருந்து விசாரணைக்காக போலீசார் அழைத்து வருகின்றனர். நீதிமன்ற நுழைவு வாயிலில் போதிய வெளிச்சம் இல்லாததால் போலீசார் தவிக்கின்றனர்.
தெரு விளக்குகள் எரிய உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
